FUTURE PONGAL
#டிஜிட்டல்_பொங்கல் அபார்ட்மெண்ட்டின் 167வது மாடியில் இருந்தது அவன் வீடு! ஜனவரி குளிர் ஜன்னல் கதவில் படிந்திருக்க உள்ளே மிதமான உறுத்தாத குளிர் ஏசியாக வீசிக் கொண்டிருந்தது. ‘தைப்பொங்கலும் வந்தது’ பாடலின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ் ரிங் டோனில் அலாரம் ஒலித்தது! குவிந்து கிடந்த போர்வைக்குள்ளிருந்து குழந்தை பாகுபலியை ஏந்திய ராஜ மாதா போல ஒரு கை வெளிப்பட்டு அலாரம் ஒலித்த ஆப்பிள் ஐ போன் 76 Pro max ஐ எடுத்தது, நேரம் அதிகாலை 5:30! ஏங்க எழுந்துட்டிங்களா இன்னிக்கு பொங்கல் என்ற அவன்.. மனைவியின் அசரீரீ லேட்டஸ்ட் மாடுலர் கிச்சனில் இருந்து ஒலித்தது போர்வையை விலக்கி உதறி சோம்பல் முறித்தான், மீண்டும் தூங்க வந்த ஆசையை அடக்கிக் கொண்டான். எழுந்து பாத்ரூமிற்கு சென்று 15 நிமிடங்களுக்குப் பின் புதிய மலர் போல வெளியே வந்தான். ஷேவ் செய்த கன்னங்களில் ஓடிகலோன் மஸ்க் மணக்க, ப்ரஷ் செய்த பின் கொப்பளித்த ஸ்டிராபெர்ரி மவுத் வாஷில் வாய் மணக்க கிச்சனில் நுழைந்தான். அடர் பர்ப்பிள் மினி ஷார்ட்சும் வயலட் ஸ்லீவ்லெசும் அணிந்து குளித்து முடித்த அடையாளமாக தலையில் முடிச்சாக டவல் கிச்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தாள் அவன் மனைவ...