Posts

Showing posts from May, 2024

ஹைர_ஹைரா_ஐரோப்பா

#ஹைர_ஹைரா_ஐரோப்பா  2011 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு கிராமத்துக்கு சென்றதை இன்று கூகுள் புகைப்பட செயலி நினைவூட்டியது! அப்போது ஃபேஸ்புக்கில் தமிழ் தட்டச்சு அறிமுகம் ஆகவில்லை! அதனால் அந்த பயணத்தைப் பற்றி அப்போது எழுத முடியவில்லை!    வரிசையாக அந்த புகைப்படங்களை பார்த்த போது என் கண் முன்னே கொசுவர்த்திச் சுருள் சுழல.. நாம ஐரோப்பா போவோமா.. ஸ்விஸ் நாட்டின் லுஸான் (Lucerne) எனும் நகரில் இருந்தோம்! நம்ம தமிழ்நாட்டின் மதுரை போல லுஸான் ஜரோப்பாவின் மிகப் பாரம்பரியமான நகரங்களில் ஒன்று! நம்ம ஊரில் கோவில்கள் போல மத்திய ஸ்விட்சர்லாந்து என்றழைக்கப்படும் இந்நகரில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல உண்டு! மதுரைக்கு வைகை போல இந்த ஊரின் நடுவே ஓடும் ஆற்றுக்கு..  பெயரும் லுஸான் தான்! ஆனால் இதில் அபரிமிதமான நீர்வளம் கெடாமல் மாசின்றி இன்றும் அப்படியே இருப்பது வேதம் புதிது பாலுத் தேவருக்கு கன்னத்தில் விழுந்த அறை போல நமக்கு உறைக்கவேண்டும்! ஆம்.. அதை ஆறு என்பது தவறு! ஆற்றின் நீளம் 114கி.மீ (44sqr.mi) அது ஐரோப்பாவின் 5வது பெரிய நதி! நதியின் சராசரி ஆழம் 340 அடி அதிகபட்ச ஆழ...

சிம்னி_விளக்குகள்

#சிம்னி_விளக்குகள்   எத்தனை பேருக்கு சிம்னி விளக்குகளை ஞாபகம் இருக்கு? 90ஸ் கிட்ஸே இதை அதிகம் பார்த்திருக்க முடியாதுனு கருதுகிறேன்! 80களில் பல வீடுகளில் மின்சார இணைப்பு இருக்காது! அவர்கள் வீடுகளில் எல்லாம் இந்த சிம்னி விளக்கே ஒளி விளக்கு! வீட்டில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் கூட மின் தடை வந்தால்.. டக்குன்னு ஏற்றுவது இந்த விளக்கைத் தான்! ஆகவே அன்றைய எல்லா நடுத்தர குடும்பங்களின் வீட்டிலும் இருந்த இன்றியமையாத பொருள் சிம்னி விளக்கு! சிம்னி விளக்குக்கு மேல் புறம் கவிழ்த்து வைக்கும் கண்ணாடிச் சிமிழ், விளக்குத்திரி, விளக்கின் அடிப்புறம் இவை எல்லாம் விற்பதற்கு தனிக்கடைகளே அன்று இருந்தன!  சில சமயங்களில் தெருவில் வண்டியில் வைத்துக் கொண்டுவந்து விற்பனையும் செய்வார்கள்! லாந்தர், பெட்ரோமாக்ஸ், சிம்னி இந்த மூன்று விளக்குகள் தான் அன்று பிரபலமானவை! பெட்ரோமாக்ஸ் ஐ போன் போல! மண்ணெண்ணெய் நிறைய ஊற்றணும்! தினமும் துடைக்கணும்!    அது எரிவதற்கு நம்ம கவுண்டமணி & செந்தில்..  காமெடியில் செந்தில் உடைத்த மேண்டிலை அடிக்கடி வாங்க வேண்டும்! மேண்டில் ஒரு வலைத்துணி போல வட்டமாக இருக்...