Posts

FUTURE PONGAL

#டிஜிட்டல்_பொங்கல் அபார்ட்மெண்ட்டின் 167வது மாடியில் இருந்தது அவன் வீடு! ஜனவரி குளிர் ஜன்னல் கதவில் படிந்திருக்க உள்ளே மிதமான உறுத்தாத குளிர் ஏசியாக வீசிக் கொண்டிருந்தது. ‘தைப்பொங்கலும் வந்தது’ பாடலின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ் ரிங் டோனில் அலாரம் ஒலித்தது!  குவிந்து கிடந்த போர்வைக்குள்ளிருந்து குழந்தை பாகுபலியை ஏந்திய ராஜ மாதா போல ஒரு கை வெளிப்பட்டு அலாரம் ஒலித்த ஆப்பிள் ஐ போன் 76 Pro max ஐ எடுத்தது, நேரம் அதிகாலை 5:30! ஏங்க எழுந்துட்டிங்களா இன்னிக்கு பொங்கல் என்ற அவன்.. மனைவியின் அசரீரீ லேட்டஸ்ட் மாடுலர் கிச்சனில் இருந்து ஒலித்தது போர்வையை விலக்கி உதறி சோம்பல் முறித்தான், மீண்டும் தூங்க வந்த ஆசையை அடக்கிக் கொண்டான். எழுந்து பாத்ரூமிற்கு சென்று 15 நிமிடங்களுக்குப் பின் புதிய மலர் போல வெளியே வந்தான். ஷேவ் செய்த கன்னங்களில் ஓடிகலோன் மஸ்க் மணக்க, ப்ரஷ் செய்த பின் கொப்பளித்த ஸ்டிராபெர்ரி மவுத் வாஷில் வாய் மணக்க கிச்சனில் நுழைந்தான். அடர் பர்ப்பிள் மினி ஷார்ட்சும் வயலட் ஸ்லீவ்லெசும் அணிந்து குளித்து முடித்த அடையாளமாக தலையில் முடிச்சாக டவல்  கிச்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தாள் அவன் மனைவ...

☃️காஷ்மீர்

 #காஷ்மீர்_பயண_அனுபவங்கள்   நான் 2013 ஆம் ஆண்டில் ஜம்முவில் இருந்து ஶ்ரீநகருக்கு மலைச் சாலையில் காரில் பயணம் செய்த அனுபவம் மிகவும் திரில்லிங் நிறைந்தது. கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். 54 கிமீ தூரமுள்ள கொடைக்கானலே 3 மணிநேரப் பயணம் எனும் போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகிக்கவும்! முதலில் கொடைக்கானல் போலத்தான் அந்தப் பயணம் இருந்தது!  மலையேற ஏறத்தான் இமயத்தின் பிரமாண்டம் தெரிந்தது! சாலை விளிம்புப் பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன! தூரத்து மலை மீது வைஷ்ணவி கோவில் தெரிந்தது! அந்த மலையை ஒருவித பயத்துடன் டூவீலரில் கோவிலை கடக்கும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் விரல்களால் தாடையில் டைப்பிட்டு வேண்டிக் கொண்டோம்  வடக்கத்திய  டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும், இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல, எ...

30. வங்கக் கடல்..

 30. வங்கக் கடல்.. #மார்கழியின்_மறை  இந்த 30ஆவது நாள் பாசுரத்தில் மாதவன் புகழோடு தன் சுய விவரத்தையும் பாடுகிறார் ஆண்டாள். ஆனால் பாசுரத்தில் சொல்லாத மெய்யான ஆண்டாள் - பயோகிராஃபி இதுவே 👇🏿 பெயர் : ஆண்டாள், இயற்பெயர் : கோதை,  உத்தேசமான பிறந்த ஆண்டு : கி.பி.885 அல்லது கி.பி 886  கண்டெடுக்கப்பட்ட நாள் & நட்சத்திரம் : கலியுகம் நள வருஷம் ஆடி மாதம் சனிக்கிழமை சுக்ல பட்சம் பூர நட்சத்திரம் வளர்ப்பு தந்தை பெயர் : பெரியாழ்வார் கணவரின் பெயர் : அரங்கன் ஶ்ரீரங்கம்  இவரது பட்டப் பெயர்கள் : சூடிக் கொடுத்த சுடர் கொடி, ஆண்டாள், கோதை, நாச்சியார்.  எழுதியவை : திருப்பாவை, நாச்சியார் திருமொழி.  திருப்பாவை பாடல் இலக்கணம் : இயற்றர விணை கொச்சகக் கலிப்பா. ஆண்டாளின் திருப்பாவை சங்கத் தமிழ்மாலை என போற்றப்படும் நூலாகும்! திருப்பாவை என்பது பின்னர் வந்த பெயராகும்!  இதில் இருக்கும் பாவை நோன்பு சங்க இலக்கியங்களிலும் வருகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதிலுள்ள தெய்வத்தை  கிருஷ்ணனாகவும் பாவித்து பாடினார் ஆண்டாள். உன் மனதில...

29. சிற்றம் சிறுகாலே..

29. சிற்றம் சிறுகாலே.. #மார்கழியின்_மறை கடந்த பாசுரத்தில் ஆயர்குலத்தின் தகுதிகளையும் தாங்கள் செய்யாத தவறுக்கு மன்னிக்கும்படியும் கேட்ட ஆண்டாள், மார்கழி முடிய இன்னும் 1 நாள் தான் இருக்கு கடந்த 28 நாட்களாகப் பாடுகிறோம் ஒரு வேளை ஆயர் குலத்தினர் கண்ணன் மீது கொண்ட அபிமானம் அவருக்கு புரியலையோ எனும் சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு. பத்திரிக்கையாளர்களைக் கண்ட பிரதமர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே! ஏன்? சரி! நமது ஆயர்குலத்தின் விஸ்வாசம் பற்றி இன்னும் விரிவாக இவரிடம் சொல்வோம் என்று “கண்ணா தினம் அதிகாலையில் வந்து உன் காலில் விழுந்து வணங்குகிறோம்” ஏனெனில் நாங்கள் எல்லாரும் பசுக்களை மேய்த்துக் கொண்டே.. பாடல்களைப் பாடி, வீட்டிலிருந்து சுமந்து வந்த எங்கள் கட்டுச் சோறை சாப்பிட்டு ஜீவனம் நடத்தும் ஆயர்கள். ஆனால் நீயோ பெருமைமிக்க கடவுள். நீ ஏற்றத் தாழ்வின்றி எங்கள் குலத்தில் வந்து பிறந்தாயே அதற்கு தான் உன்னை மதித்து துதிக்கிறோம். உன்னிடம் இருந்து எதையாவது கொடுன்னு கேட்டு அதை மட்டும் நாங்கள்.. வாங்கிக் கொண்டு போக வரவில்லை! உனக்கு நாங்கள் ஏதாவது ஒரு சின்ன உதவியாவது பதிலுக்குச் செய்யவேண்டும் என விரும்பு...

28. கறவைகள் பின் சென்று..

 28. கறவைகள் பின் சென்று.. #மார்கழியின்_மறை இதிகாசங்களில் புகழப்பட்ட முதல் வளர்ப்பு மகன் கண்ணன் தான் அவன் திடீரென ஒருவரால் அவனது 30 வயதில் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவன் இல்லை. மதுராபுரியில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வளர்ந்தவன். பால் மணம் மாறாத சிசுவாக தன் சொந்தத் தாயின் தாய்ப்பாலைக்கூட அருந்தும் பாக்கியம் பெறாதவன்!  அதனால் தான் என்னவோ கோகுல பிருந்தாவனத்தில் அவன் பாலையும் வெண்ணையையும் திருடி திருடித் தின்றிருக்கலாம். யது குலத்தில் பிறந்த கண்ணனை ஆயர்குல மன்னனாக.. தங்கள் அன்பு ரமணனாகவே அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். “மன்னிப்பு” ஏய்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. ரமணா படத்தில் கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது.  கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்! ஆமாம் ஏன் தவறு செய்ய வேண்டும்? அது தெரிந்து செய்த தவறல்ல தெரியாமல் நடந்த தவறுகள்!  ஆக்சுவலி எங்க ஆயர்குலத்தோட குவாலிட்டி தெ...

27. கூடாரை வெல்லும்..

   27.  கூடாரை   வெல்லும்.. #மார்கழியின்_மறை  திருப்பாவை நோன்பிற்கும் இஸ்லாமியர்கள் கடை பிடிக்கும் ரமலான் நோன்பிற்கும் ஓர் ஒற்றுமையிருக்கிறது! நாங்கள் நெய், பால் இதையெல்லாம் உண்ண மாட்டோம், தலையில் பூச்சூட மாட்டோம், கண்ணுக்கு மையிட மாட்டோம், எங்களை அலங்கரித்துக் கொள்ள மாட்டோம் என்றெல்லாம் இந்நோன்பை துவக்கும் போது 2 ஆவது பாசுரத்தில் சூளுரைத்த ஆண்டாள்..   நோன்பு துவங்கி 27 ஆவது நாளில் தான் கூறிய விரதத்தை விடச் சொல்கிறார் எப்படி? தட்டு   நிறைய   பால்   சோ றி ட்டு   அதிலே   கரண்டி   கரண்டியாய்   நெய்யை   விட்டு   அந்தப்   பாலும் நெய்யும்   முழங்கை   வழியே  சறுக்குப் பலகையில் சரிவது  போல   வழிய   வழிய   சாப்பிட வேண்டுமாம் .  பாலும் வேண்டாம் நெய்யும் வேண்டாம் என்றவர் இப்போது இரண்டையும் ஒன்றாகவே சாப்பிடச் சொல்கிறார்.   அது மட்டுமா! கண்களில் மை தீட்டக்கூடாது, அலங்காரம் செய்து கொள்ளக் கூடாதுன்னு சொன்னவர் இந்த  உணவை  சாப்பிடப்   போகும்   முன்   ...

#கிஸ்கிஸ்_கிச்சடி

விளம்பரத் துறையில் ரீபொசிஷன் என்று ஒன்று இருக்கிறது, முன்பு நாம் சரியாகச் செய்யாத அதே விஷயத்தை அடுத்த முறை மிகச் சரியாக செய்வதற்கு தான் அந்தப் பெயர்! கிச்சடியும் அப்படித்தான் சரியான பதத்தில் செய்யா விட்டால் அதை அடுத்த முறை சிறந்த கிச்சடியாகச் சமைத்து ரீ பொசிஷன் செய்யவேண்டும்! சரி இந்த உப்புமா & கிச்சடி இந்த இரண்டுக்கும் வேறுபாடு என்ன?  உப்புமாவில் ரவை, வெங்காயம், சென்னா தால், கடுகு, கடலை பருப்பு அல்லது முந்திரி மட்டும் இருக்கும். கிச்சடியில் இவற்றோடு தக்காளி, உருளை, பட்டாணி, கேரட், பச்சை மிளகாய் போன்ற காய்களும் இருக்கும். உப்புமாவுக்கு வெள்ளை நிறம் போல கிச்சடிக்கு மங்கலகரமான மஞ்சள் நிறம்! உப்புமாவை உதிராக புட்டு போலவும் செய்யலாம் நல்ல குழைவாகவும் செய்யலாம்! ஆனா கிச்சடியை குழைவாக மட்டுமே செய்யணும்! கேப்பக் களி பார்த்து இருக்கிங்களா அந்த கன்ஸிஸ்டன்ஸியில் இருக்கணும். மேலே வெல்வெட் மாதிரி மென்மையா இருக்கணும்! சாப்பிட்டா அப்படி சாஃப்டா இருக்கிற கிச்சடியைத் தான் சாப்பிடணும். கிச்சடிக்கு மிகச் சரியான ஜோடி தேங்காய் சட்னிதான். சாம்பார் என்றால் அரைச்சிவிட்ட சாம்பார், கோசுமல்லி ரெண்டுமே ப...