Posts

26. மாலே மணிவண்ணா…

 26. மாலே மணிவண்ணா.. #மார்கழியின்_மறை மனிதர்களில் பேராசைகள் ஏதுமின்றி தனக்கு இதுபோதும் என்ற மனநிறைவு அடைகிறவர்கள் அரிதினும் அரிது. உனது ஆசை என்ன எனப் பொதுவாக யாரிடமாவது கேட்டால் சொகுசான கார், பெரிய பங்களா, தங்க & வைர நகைகள், வித விதமான ஆடைகள், கோடி கோடியாக பணம், எஸ்டேட், தோட்டம், பண்ணை வீடு, வெளிநாட்டில் ஒரு தீவு எனப் பட்டியலிடுவார்கள்.  ஏனெனில் இவர்கள் தனது ஒரு ஓட்டுக்கே பத்தாயிரம் வாங்குபவர்கள் அல்லவா! ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது பட்டியலில் இதெல்லாம் இல்லை. அவர் பட்டியல் வேறு அதைப் படிப்போமா.. மணிவண்ணா! இம்மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளின் படி உமக்கு என்ன வேண்டும் என நீ கேட்டால், “இதோ இது தான் என் தேவைகள்.. உலகமதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண் சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக்கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும் ஆலிலைக் கண்ணா இவை எல்லாம் எமக்கு நீ அருளினாலே போதும் அவ்வளவுதான்! பாருங்கள் இப...

25. ஒருத்தி மகனாய்…

 25. ஒருத்திமகனாய்.. #மார்கழியின்_மறை கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண் ஆண்டாள்! கண்ணன் மேல் கொண்ட அன்பால் முத்தையா என்னும் தன் இயற்பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித் துவம்மிக்க பல கவிதைகளை எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன் பல பாடல்களில் எடுத்துக் கொண்டார். தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெறும் “ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்” என்ற இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றிய பாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய் தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்! அவர் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள். எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோல அமைந்தது விட்டது ஆச்சரியம் தான்! ஆண்களில் பிறந்தவீடு ஒன்று புகுந்த வீடு ஒன்று எனப் பிறந்து வாழ்ந்த அவதாரம் கண்ணன் தான்! அதுவும் பிறந்த அந்த இரவே தான் பிறந்த இடத்தில் இருந்து வளரும் இடத்திற்கு மாற்றப்பட்டவன். தேவகி என்னும்..  ஒருத்திக்கு பிறந்து யசோதை என்னும் ஒருத்தியிடம் ஒளிக்கப்பட்டு வளர்ந்த ஒப்பில்லாதவன். கண்ணனின் தாய்மாமன் கம்சன் தனது தங்கையின் குழந்...

24. அன்று இவ்வுலகம்…

 24. அன்று இவ்வுலகம்.. #மார்கழியின்_மறை திருமாலை அவதாரங்களின் அரசன் என்று சொல்லலாம். பூவுலகில் தீமைகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வந்து உலக மக்களை காப்பவன்! அவன் காக்கும் கடவுள் அல்லவா. சரி கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் தானே! அவர் ஏன் அவதாரம் எடுத்து வந்து தீயவர்களை அழிக்கவேண்டும்? அவர் நினைத்தால் தன் சக்தியால் ஒரு நொடியில் தீமை செய்பவர்களை அழித்துவிடலாமே?  நியாயமான கேள்வி! கடவுள் ஏன் பூமிக்கு அவதாரம் எடுத்து வருகிறார்? அவரும் ஆசாபாசங்கள் உள்ள மனிதனாகப் பிறந்து மற்ற மனிதர்கள் மத்தியில் வாழும் போது பிறர்க்கு உதாரணமாக வாழ வேண்டும்! எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என உணர்த்தவும், சகல உறவுகளோடு பிறந்து அவர்களை விட்டுக் கொடுக்காது அரவணைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் திருமாலின் அவதாரங்களைப் பற்றி “போற்றிப் பாடடி பெண்ணே” என கிருஷ்ண’தேவர்’ கேட்காமலேயே அவரைப் போற்றி அவரது பெருமையைப் பாடுகிறார். இக்கால அரசியல்வாதிகள் பதவிக்காக சொல்லும் உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்கி எனும் பொய் போல இல்லாமல் மெய்யாகவே பாடுகிறார்! விஸ்...

23. மாரி மலை முழஞ்சில்…

 23. மாரி மலைமுழஞ்சில்.. #மார்கழியின்_மறை இன்றைக்கு ஒருவரை சிங்கம் போல இருக்கிறார் என்ற உவமையை அதற்கு துளியும் பொருத்தமில்லாத ஆட்களுக்கு பயன்படுத்துவதை பரவலாகப் பார்க்கிறோம்! ஏரியா கவுன்சிலரின் ஒன்று விட்ட சித்தப்பா மகனுக்கு கூட சிலிர்த்தெழுந்த சிங்கமேன்னு பிளக்ஸ் அடிக்கும் அல்லக்கைகள் இருக்கிறார்கள்! ஆண்டாள் கண்ணனை சிங்கம் என்று அழைப்பது அதுபோல அல்ல!  அவர் நரசிம்மமாக அவதாரம் எடுத்தவன் என்பதால்! அந்த சிங்கம் போன்ற வீரத்தால் எதிரிகளை அழித்தவன் மக்களை காத்தவன்! அடைமழைக் காலத்தில் தன் மலைக்குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் துயிலெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து நான்கு பக்கமும் பார்த்து பின்னர் கம்பீரமாக கர்ஜனை செய்து..  தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறக் கண்ணா நீயும் எழுவாயாக! உன் பரந்த மாளிகையிலிருந்து வெளியேறி உனக்கான சிங்காசனத்தில் அமர்ந்து அடியவர் நாங்கள் உன்னிடம் கேட்ட கோரிக்கைகளை சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு அதை அருள வேண்டும் என்கிறார். இதில் வியப்பான விஷயம் அந்த காலத்திலேயே ஆண்...

22. அங்கண்மா ஞாலத்து…

 22. அங்கண்மா ஞாலத்து... #மார்கழியின்_மறை ஹே.ஹே.ஹே.. இந்த பாட்ஷா யாருக்கும் கெட்டது செய்யமாட்டான்.. தன்ன நம்பி வந்தவங்கள கைவிடவே மாட்டான்.. என்னை நம்பாம கெட்டவங்க அதிகம், நம்பிக் கெட்டவங்க யாருமில்லை இப்ப முடிவு பண்ணிக்கோங்க இந்த பாட்ஷாவா இல்ல அந்த மார்க் ஆண்டனியா? இப்படி பாட்ஷா படத்தில் ரஜினி கேட்கும் காட்சி நினைவிருக்கிறதா! உடனே அந்த எல்லா பெரிய டான்களும் பாட்ஷாவின் புறங்கையில் முத்தமிட்டு ஏற்றுக் கொள்ளுவார்கள். அப்படி ஒரு காட்சியை ஆண்டாளும் பாசுரத்தில் வைத்திருக்கிறார்! உலகின் பெரும் அரசர்கள் யாவரும் திருமால் வசம் சரணடைய அவன் காலடியில் வந்து காத்திருக்கிறார்கள் என்று. பார்த்தால் பசி தீரும்.. பாவம் தீருமா.?  கண்ணனின் கண் பார்வை நம்மீது பட்டால் அது சாத்தியம் என்கிறார் அதற்கு அவனைச் சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார். ஆண்டாளின் உவமைத் திறன் மிளிரும் மற்றொரு பாடல் இது. அலைகள் தாலாட்ட திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் நாராயணன் அவரைக் காண அவர் பார்வை நம் மீது படாதா? என்று..  உலகைக் கட்டியாளும் பெரும் சக்ரவர்த்திகள் அனைவரும் தங்கள் பராக்கிரமங்களை மறந்துவிட்டு வந்...

21. ஏற்ற கலங்கள்…

 21. ஏற்ற கலங்கள்... #மார்கழியின்_மறை பாசுரங்கள் முழுவதும் பசுக்களை வள்ளல்கள் என்று ஆண்டாள் விளிக்கிறார். விசு படத்தின் எல்லா படங்களிலும் தவறாமல் வரும் ஆஸ்தான நடிகர்கள் போல பல பாசுரங்களில் யாராவது அதிகாலையில் எங்காவது பாலை கறந்து கொண்டு இருப்பார்கள் அல்லது பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். செல்வம் தரும் பால் வளம் மிக்க பசுக்கள் அடிக்கடி வந்து போகும்! தன் கன்றின் குரல் கேட்ட பாசத்தில் தானாகப் பாலைப் பொழியும் மாடுகள், எருமைகள், கன்றுகள் வீட்டை பால் சகதியாக்கும்! இப்படிப் பெரும் பால் வளத்தையும், பசு & எருமைகளையும் திருப்பாவையின் ஆஸ்தான பாத்திரங்களாக பாசுரமெங்கும் காணலாம்!  இந்தப் பாத்திரங்களில் வரும் பசுக்களின் பாலை பாத்திரம் வைத்து கறக்கும் போது அந்தப் பால் பாத்திரத்தில் அதி வேகமாய் வீழ்ந்து அடுப்பில் பொங்குவது போல எதிர்த்து பொங்குகிறது என்கிறார்! {நியூட்டனின் விதி} கடந்த இரு நாட்களாக பாடிய பாசுரங்களுக்கு  கண்ணன் சிறிதும் செவி சாய்க்கவில்லை! அப்போது என்ன செய்ய? சடாரென சரணாகதி தானே! இதோ ஆண்டாள் உருகிப் பாடுகிறார்.! பசுக்களிடம் இருந்து கலத்தில் கறக்கும் ப...

20. முப்பத்து மூவர்…

 20. முப்பத்து மூவர்... #மார்கழியின்_மறை  திருப்பாவையில் பஞ்ச் டயலாக்!  “நான் சொல்றதை தான் செய்வேன்.. செய்யறதை தான் சொல்வேன்”. “ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்” “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” இவை அனைத்தையும் விட ஒரு அருமையான பஞ்ச்டயலாக்கை ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் வைக்கிறார்!  கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னையின் மார்பில் தலை வைத்து ரொமாண்டிக்காக உறங்குகிறான் கண்ணன் என்றவர், அப்படி ஒரு சுகமான தூக்கத்தில் அந்த  ஒரு பாட்டுக்கே எழுந்துவிட்டால் நன்றாக இருக்குமா? ஆகவே இந்தப்பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்..  இந்தப்பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார். இதன் உள் குத்து.. இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ ஒரு பொண்ணு மார்ல சாஞ்சிகிட்டு தூங்கிட்டு இருக்கியேய்யா என உசுப்பிவிடத்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனை என்றால் யாரும் சொல்லாமல் அங்க வருகின்ற வீரா.. ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு, வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்...