ஹைர_ஹைரா_ஐரோப்பா

#ஹைர_ஹைரா_ஐரோப்பா 


2011 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு கிராமத்துக்கு சென்றதை இன்று கூகுள் புகைப்பட செயலி நினைவூட்டியது! அப்போது ஃபேஸ்புக்கில் தமிழ் தட்டச்சு அறிமுகம் ஆகவில்லை! அதனால் அந்த பயணத்தைப் பற்றி அப்போது எழுத முடியவில்லை!  வரிசையாக அந்த புகைப்படங்களை பார்த்த போது என் கண் முன்னே கொசுவர்த்திச் சுருள் சுழல.. நாம ஐரோப்பா போவோமா..


ஸ்விஸ் நாட்டின் லுஸான் (Lucerne) எனும் நகரில் இருந்தோம்! நம்ம தமிழ்நாட்டின் மதுரை போல லுஸான் ஜரோப்பாவின் மிகப் பாரம்பரியமான நகரங்களில் ஒன்று! நம்ம ஊரில் கோவில்கள் போல மத்திய ஸ்விட்சர்லாந்து என்றழைக்கப்படும் இந்நகரில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல உண்டு! மதுரைக்கு வைகை போல இந்த ஊரின் நடுவே ஓடும் ஆற்றுக்கு.. 


பெயரும் லுஸான் தான்! ஆனால் இதில் அபரிமிதமான நீர்வளம் கெடாமல் மாசின்றி இன்றும் அப்படியே இருப்பது வேதம் புதிது பாலுத் தேவருக்கு கன்னத்தில் விழுந்த அறை போல நமக்கு உறைக்கவேண்டும்! ஆம்.. அதை ஆறு என்பது தவறு! ஆற்றின் நீளம் 114கி.மீ (44sqr.mi) அது ஐரோப்பாவின் 5வது பெரிய நதி! நதியின் சராசரி ஆழம் 340 அடி அதிகபட்ச ஆழம் 703 அடி! 


மவுண்ட் பிளாட்டஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நதி அதிக வளைவுகளும் திருப்பங்களும் கொண்டது! இந்த நதியில் கப்பல் போக்குவரத்தே உண்டு! நமது கேரளா ஹவுஸ் போட் சுற்றுலா போல ஹனிமூன் ஜோடிகள் கொண்டாட பலவிதமான அளவுகளில் இருக்கும் உல்லாசக் கப்பல் பயணங்கள் உண்டு! உலகின் அற்புதமான ஹனிமூன் பயணங்களில் இதுவும் ஒன்றாகும்! 


உங்கள் பர்ஸ் எவ்வளவு கொழுத்திருந்தாலும் இங்கு டக்குன்னு இளைக்கும்! மவுண்ட் பிளாட்டஸ் மலையே ஒரு அழகிய சுற்றுலாத் தலம்! ஸ்விஸில் இது போல ஏராளமான மலை வாசஸ்தலங்கள் உண்டு! இங்கு மலை மீது செல்ல இரயில்களும், கேபிள் கார்களும் உண்டு! லுஸான் ஏரியின் ஏரியல் அழகினை மலை மேலிருந்தே ரசிக்கலாம்! லுஸான் நகரின் நடுவே இந்த ஆறு அமைந்துள்ள..


இடத்திற்கு பெயர் சேப்பல் வாட்டர் பிரிட்ஜ் என்று பெயர்! நமது மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் போல கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஃபிரிட்ஜ்! ஆற்றின் கரையில் முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட ஃபிரிட்ஜ்! அழகிய மரக்கூரை அதை அலங்கரிக்கும் வண்ண ஓவியம், சுவிஸ் நாட்டில் வீசும் செல்லக் குளிரில் இந்த பாலத்தில் மாலை நேரம் நடப்பதே..


மிகவும் அருமையான அனுபவம் அரைக் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமுடைய மரப்பாலம் இது! இந்த மரப்பாலத்தில் நடந்து வரும் போது ஆங்காங்கே ஓரத்தில் இசைக் கலைஞர்கள் நின்று கிடார், வயலின், அகார்டியன், மவுத் ஆர்கன் வாசிப்பார்கள், உங்களை வரைந்து தரும் ஓவியர்கள் உண்டு, நின்று கொண்டே வியாபாரம் செய்பவர்கள் உண்டு ! ஒரு திருவிழாவின் உள்ளே..


உள்ள கடைகளுக்கு போய் வந்தது போல இந்தப் பயணம் கலகலப்பாக இருக்கும்! சேப்பல் ஃபிரிட்ஜை சுற்றி ஆற்றின் இருபுற கரையோரங்களில் நல்ல உணவகங்கள் உண்டு! நிறைய கடைகள் உண்டு! மக்கள் கூட்டம் அலைமோதும் நம்ம ஊரு ஷாப்பிங் மால்கள் போல பரபரப்பான இடம்! இங்கே மசூதி போன்ற வடிவமைப்பில் இருக்கும் அழகிய ஹோட்டல் குரு! 


நாங்கள் அங்கு தான் தங்கியிருந்தோம்! அறைக்குள் இருந்து ஜன்னலை திறந்தாலே ஆறு தெரியும்! அழகிய அன்ன வாத்துகள் நீந்தும்! சேப்பல் பாலத்தில் வாசிக்கும் அகார்டியன் இசை வந்து செவியில் மோதும்! மே மாதங்களில் இரவு 2 மணி வரை இங்கு இருட்டாது! விடிய விடிய உற்சாகம் பொங்கி வழியும் இடம் இது! இங்கு இருந்த மெக்டனால்ஸ் கிளையில் ஒரு இலங்கைத் தமிழர்..


இருந்ததால் தங்கியிருந்த 5 நாட்களும் ஒரு வேளையாவது அங்கு போய்விடுவேன்! ஆனியன் ரிங்ஸ், வெஜ் பர்கர் எல்லாம் நம்ம நாக்குக்கு ஏற்றபடி காரமாகத் தருவார்! அவர் பெயர் ஜெகன்! அவர் ஒரு நாள் அண்ணை! இன்னும் எத்தனை நாட்கள் ஸ்விஸில் நிக்கறிங்க என்றார்! நான் ஒரு வாரம் என்றதும் இங்கட ஸ்விஸ் நாட்டு கிராமங்களை பார்த்து இருக்கிங்களா? என்றார்! 


அட கறிச் சோறு திங்க கட்டணமா!! இல்லைபா ஆனா போக விருப்பம் தான் என்றேன்! அப்போ நான் ஏற்பாடு செய்யவா என்றார்  எனது பிற நிகழ்ச்சிகளுக்கு இடையூறு வராத நாளை நான் சொல்ல அதே தேதியில் பயணம் முடிவானது! லுசானிலிருந்து 50 கி.மீ தூரத்தில் ஒரு கிராமம்! என்னோடு சினிமா பிரபலம் ஒருவரும் வந்து இப்பயணத்தில் இணைந்து கொண்டார்! அவர் யாருன்னா..


வரும்..

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..